புது தில்லி: தொடர்ந்து 11-வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல பத்திரிக்கையான போர்பஸ் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் முதலாவது இடத்தை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.
அதேபோல இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அர்செலோர் மெட்டல் குழுமத்தின் தலைவர் லக்ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி உள்ளனர். 100 பேர் கொண்ட பட்டியலில் இந்த ஆண்டு 4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து 11-வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் மோடியின் ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

ஜந்தா் மந்தரில் தொடரும் சிஜேபி போராட்டம்: சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் ஆதரவு

பஹல்காம் தாக்குதல்: உளவுத் தகவல் சரிவர இல்லாததே காரணம்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




