நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

சத்தீஸ்கர்: 16 நக்ஸல் தீவிரவாதிகள் கைது

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2 பெண்கள் உட்பட 16 நக்ஸல் தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 5 பேர் சிஆர்பிஎஃப் போலீஸார் மீது கடந்த ஆண்டு நடத்திய

Updated On :9 அக்டோபர் 2018, 2:38 am IST


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2 பெண்கள் உட்பட 16 நக்ஸல் தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் 5 பேர் சிஆர்பிஎஃப் போலீஸார் மீது கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர். 
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிந்தாகுஃபே காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மலைப்பகுதியான மின்பா கிராமத்தில் சிறப்பு அதிரடிப்படை, மாவட்ட வனத்துறை மற்றும் மாவட்ட காவல்துறையும் ஒருங்கிணைந்து ஞாயிற்றுகிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் சுற்று வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். 
அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்புப்படையினர் அடர்ந்த வனப்பகுதியிலும், நக்ஸல் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிப்பொருள்களை பயன்படுத்தி காவல் நிலையங்கள் மீதும், காவல்துறை அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக மாவோயிஸ்ட்களின் பெயரால் ஏற்கனவே சுவரொட்டியும், பதாகைகளும் வைக்கப்பட்ட நிலையில் தீவிரவாதிகளை கண்டறியும் வகையில் கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. 
இதனிடையே, ராய்ப்பூரில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள புர்காபல் பகுதியில் முகாமிட்டு தங்கிய கூட்டு நடவடிக்கைக்குழு மின்பா மற்றும் தாடுமெல்டா பகுதிகளை சுற்றி வளைத்து, தீவிரவாதிகளை கைது செய்தது. 
கைது செய்யப்பட்டவர்கள் மிலிட்டியா பிரிவு அல்லது தண்டகாரன்யாஆதிவாசி கிஸான் மஜ்தூர் சங்கதன் (டிஏகேஎம்எஸ்) எனப்படும் மாவோயிஸ்ட் பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர். 
16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் úஸாதி கங்கா, மாதவி பீமா, பான்சும் நந்தா, முசாகி முக்கா, மாத்வி பீமா ஆகிய 5 பேர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மா மாவட்டம் புர்காபல் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் மீது நடத்திய தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.