2019 நாடாளுமன்றத் தேர்தலில் தைரியமிருந்தால் தன்னை எதிர்த்துப் போட்டியிடுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சாக்ஷி மஹாராஜ் சவால் விடுத்தார்.
இதுதொடர்பாக உத்தரபிரதேசத்தின் உன்னோ தொகுதி பாஜக எம்பி சாக்ஷி மஹாராஜ் கூறுகையில்,
வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிஸ் தலைவர் ராகுல், தைரியமிருந்தால் என்னை எதிர்த்துப் போட்டியிடட்டும். அதில் மட்டும் அவர் வெற்றி பெற்று விட்டால் நான் அரசியலில் இருந்து விலகிவிடுகிறேன். ஆனால் தோல்வியுற்றால் ராகுல், இந்தியாவை விட்டு வெளியேரி இத்தாலிக்கு சென்றுவிட வேண்டும்.
ராகுலின் யாத்திரைகளை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை, பாஜக-வுக்கு அதற்கான அவசியமும் இல்லை. ஆனால் அதுபோன்று யாத்திரை மேற்கொள்ளும் போது புனிதம் காக்கப்பட வேண்டும்.
எனவே ராகுல் யாத்திரை மேற்கொள்ளும் முன்னதாக அவர் தன்னை புனிதப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் புனிதமற்ற யாரும் கோயில்களுக்குள் நுழையக் கூடாது. அசைவ உணவுகள் உண்ட பின்பு கோயிலில் தரிசனம் செய்யக் கூடாது.
சில நேரங்களில் முஸ்லிம்களின் குல்லா அணிவதையும், திடீரென சிவ பக்தராக மாறுவதையும் ராகுல் வாடிக்கையாக் கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய விஷ்ணு கோயில் அமைக்கும் அகிலேஷ் யாதவின் திட்டத்தை நான் வரவேற்கிறேன்.
பாஜக-வைக் கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால் தான் அவை அனைத்தும் ஒன்று கூடி மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க திட்டமிடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்க்கு நம்பர் பிளேட்டை பரிசளித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

நீட் வினாத்தாள் கசிவு: மேலும் ஒரு பேராசிரியர் கைது!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித், பும்ரா விளையாடுவார்களா?

ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ் தரும் புதிய கார்! அறிமுகம் செய்கிறது மாருதி!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

