ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வயது வரம்பு கூடாது

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அது குறித்து புகார் அளிக்க வயது வரம்பு எதுவும் இருக்கக்கூடாது என சட்ட அமைச்சகத்திடம் மத்திய குழந்தைகள் மற்றும்

News image
Updated On :9 அக்டோபர் 2018, 1:08 am IST

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அது குறித்து புகார் அளிக்க வயது வரம்பு எதுவும் இருக்கக்கூடாது என சட்ட அமைச்சகத்திடம் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் தெரிவித்ததாவது:
நாட்டில் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள், அது குறித்து தைரியமாகப் புகாரளிக்க முன்வர வேண்டும். 
இருந்தபோதிலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர் பல்வேறு தருணங்களில் குடும்ப உறுப்பினராகவோ, நெருங்கிய உறவினராகவோ, முன்பே அறிமுகமானவராகவோ இருப்பதால், பல்வேறு குழந்தைகள் அதைப் பற்றி புகார் அளிக்க தயக்கம் காட்டுகின்றனர். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்திய நபரை, பெண்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 
அது ஒரு ரணம் போல், மனதை உறுத்திக்கொண்டே இருக்கும். அது குறித்து, 10 முதல் 15 ஆண்டுகள் கழித்தும் புகாரளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
எனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அது குறித்து புகார் அளிக்க வயது வரம்பு எதுவும் இருக்கக்கூடாது என சட்ட அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது உள்ள சட்ட நடைமுறைகளின்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகள், சம்பவம் நிகழ்ந்த 3 ஆண்டுகளுக்குள் புகார் அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 
இது தவிர, சில தருணங்களில் மட்டும் தாமதமாக அளிக்கப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஆனால், 18 வயதைக் கடந்த பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து புகாரளிக்க பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன. 
பெண்கள் 30 வயது வரை பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக, கடந்த வாரம் மேனகா காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.