சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அறிவியல் ரீதியில் அணுகுவது தவறு: தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில், திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், பெண்களிடம் இருந்து விலகி இருக்கவே, ஐயப்பன் சபரிமலையில் குடிகொண்டுள்ளார். எனவே, சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பானது முற்றிலும் முரண்பாடானதும், விபரீதமானதும் ஆகும். மேலும், இது ஏற்றுக்கொள்ளத்தக்கதும் அல்ல.
மக்களின் நம்பிக்கையை அறிவியல் பூர்வமாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் அணுகுவது முற்றிலும் தவறானதாகும். எனவே, இத்தீர்ப்பினை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மதங்களே அழிந்துவிடும்: மேலும், நாயர் சேவை சமூகம் (என்எஸ்எஸ்) சார்பாகவும் மற்றொரு மனு தனியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதைக் கவனிக்க உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது. கோயிலில் ஒட்டுமொத்த பெண்களுக்கும் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே அது போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மக்களின் நம்பிக்கையில் உச்ச நீதிமன்றம் தலையிட ஆரம்பித்தால், குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்ற மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையே பாதிக்கப்படும். மேலும், மதங்களே அழிந்து விடும் நிலைமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்குத் தடை இருந்து வந்தது. இந்நிலையில், அதுதொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு சில தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல்வேறு தரப்பினர் மத்தியில் இத்தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், கண்டனப் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
முக்கியமாக, கேரள மாநிலத்தில், பல்வேறு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை தந்திரி குடும்பம், பந்தள ராஜ குடும்பம், நாயர் சேவை சமூகம் மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில், கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் கடந்த சனிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பங்
கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



