எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ம.பி: அமைச்சர் படத்துடன் 2000 பரிசு பொருள்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமோ மாவட்டத்தில் 2 ஆயிரம் பைகளில் அம்மாநில நிதியமைச்சர் ஜெயந்த்

Updated On :9 அக்டோபர் 2018, 1:07 am IST


மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமோ மாவட்டத்தில் 2 ஆயிரம் பைகளில் அம்மாநில நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையாவின் புகைப்படத்துடன் கூடிய பரிசு பொருள்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. இம்மாநிலங்களில் உடனடியாக நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 28ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. 
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் ரவீந்திர செளக்ஷேக்கு வந்த புகாரின் அடிப்படையில் ஞாயிற்றுகிழமை நடத்திய சோதனையில் 2,000 பேக்குகளில் சானிடரி நாப்கின்கள் மற்றும் சோப்புகள் அடங்கிய மூட்டையை கைப்பற்றினர். அந்த பைகளில் அமைச்சர் ஜெயந்த் மல்லையாவின் புகைப்படமும், அரசின் சாதனை குறிப்புகளும் அதில் இருந்தது கண்டறியப்பட்டது. இதுவரை யாருக்கும் விநியோகிக்கப்படாத அந்த பரிசுபொருள்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததால் அவற்றை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மத்தியப் பிரதேச புறநகர் வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் சுய உதவிக்குழுக்களுக்கு அனுப்பி வைப்பதற்காக அந்தப் பரிசு பொருள்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ரவீந்திர செளக்ஷே தெரிவித்தார். 
பல்வேறு பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்தப் பரிசு பொருள்களில் 600 பைகளை வைத்திருந்ததாக சுய உதவிக்குழுவின் மேலாளர் அகிலேஷ் சுக்லா மற்றும் அவரது ஓட்டுநர் லால்சந்த் அகிர்வார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.