புது தில்லி: கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லியைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று முறைகேடு செய்தது மற்றும் திவால் அறிவிப்பு வெளியிட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றததில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக 46 அம்ரபாலி குழும நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அதன் இயக்குநர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் அருண் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் கடந்த இரண்டு மாதங்களாக இயக்குநர்கள் மூவரும் , நீதிமன்ற உத்தரவின்படி தொடர்புடைய 46 நிறுவனண்களுக்கான ஆவணங்களை தடயவியல் பரிசோதனைக்கு தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த நீதிபதிகள் கூறியதாவது:
உங்களது நடவடிக்கையானது நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறுவதாக அமைந்துள்ளது. நீங்கள் நீதிமன்றத்துடன் கண்ணாமூச்சி ஆடுகிறீர்கள். நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறீர்கள்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், அம்ரபாலி நிறுவன இயக்குநர்கள் மூவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டதோடு, 46 குழுமம் நிறுவனங்கள் தொடர்பாக அவர்களிடம் இருக்கும் ஆவணங்கள் அனைதத்தையும் ஒன்று விடாமல் கைப்பற்றுமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் கட்டுமானத் திட்டங்களில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்குகளில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு புதனன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அருண் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவணங்களைக் கைப்பற்றுவது தொடர்பான உத்தரவின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி நீதிமன்றத்தில் காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அம்ரபாலி நிறுவனத்தின் 9 கட்டடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லவ்வர் பாய் படத்தின் பூஜை க்ளிக்ஸ் - புகைப்படங்கள்

தூத்துக்குடியில் சுழல் காற்று! வைரலாகும் அரிய நிகழ்வு!

நீட் தேர்வு மன அழுத்தத்தால் தொடரும் தற்கொலைகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்ற இந்தியா ஏ அணி!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




