இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்று முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றது.
இலங்கையில் நடைபெற்று வந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் விளையாடின.
இந்த தொடரின் இறுதிப்போட்டி தம்புல்லாவில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 377 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் திலக் வர்மா 67 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள், பிரியான்ஷ் ஆர்யா மற்றும் அனுகுல் ராய் தலா 39 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் குகதாஸ் மதுலான், வனுஜா சஹான் மற்றும் ரவிந்து ஃபெர்னாண்டோ தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஷிராஸ், துலாஜ் சமுடிதா மற்றும் சஹான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா!
378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 47.1 ஓவர்களில் 311 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக வனுஜா சஹான் 62 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சதீரா சமரவிக்கிரம 52 ரன்கள், விஜயகாந்த் வியாஸ்காந்த் 39 ரன்கள், சஹான் 38 ரன்கள் எடுத்தனர்.
India A beat Sri Lanka A by 66 runs to clinch the #TriNationSeries 2026 title ð
— BCCI (@BCCI) June 21, 2026
A brilliant campaign comes to a perfect end ðð
Scorecard â¶ï¸ https://t.co/CnmyVyoyjy#SLAvINDA pic.twitter.com/hz1m4voody
இந்தியா தரப்பில் யஷ் தாக்குர் மற்றும் விப்ராஜ் நிகம் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அனுகுல் ராய் இரண்டு விக்கெட்டுகளையும், அசோக் சர்மா மற்றும் திலக் வர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Summary
India A defeated Sri Lanka in the final to win the tri-nation ODI series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை சென்றடைந்த இந்திய அணியினர்..! 9 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் டெஸ்ட் தொடர்!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!

சதம் விளாசிய இமேஷா துலானி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!

23 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மே.இ.தீவுகள்!
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |




