FOLLOW US

ON GOOGLE DISCOVER

மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

சதம் விளாசிய இமேஷா துலானி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

சதம் விளாசிய மகிழ்ச்சியில் இமேஷா துலானி - படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :31 ஜூலை 2026, 8:14 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மகளிரணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், டி20 தொடர் இன்று (ஜூலை 31) தொடங்கியது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டம்புல்லாவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஷாவால் ஷுல்ஃபிகர் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, கேப்டன் முனீபா அலி 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். இமான் நசீர் 21 ரன்கள், ஆயிஷா ஸாபர் 17 ரன்கள், சைரா ஜபீன் 13 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். காவ்யா கவிந்தி, சுகந்திகா குமாரி மற்றும் சமோடி பிரபோதா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சதம் விளாசிய இமேஷா துலானி! இலங்கை அணி வெற்றி!

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய இமேஷா துலானி சதம் விளாசி அசத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 64 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சமாரி அத்தப்பத்து 39 ரன்கள், கவிஷா தில்ஹாரி 11 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் நஸ்ரா சாந்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹம்னா பிலால் மற்றும் உம்-இ-ஹனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

The Sri Lanka women's team won the first T20 match against Pakistan by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.