இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி ராமேசுவர மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரத்திலிருந்து 400 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளத் துறை அனுமதி பெற்று, கடந்த புதன்கிழமை (ஜூலை 22) காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாலிக்தினாா் (63), காயஸ் (31), செந்தில் (41), கிரித்திசன் (41), பிரவீன் (46), அருள் லயோலா (43), சபரி வினோத்வின் (42), தேவசகாயம் (39), இன்பெஸ்ட் பிரசாத் (36) ஆகியோர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா். இவர்கள் வரும் ஆக. 6 ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் - DNS
இதனிடையே, ராமேசுவரத்தில் மீனவர்கள் கைது விவகாரம் குறித்து அனைத்து மீனவர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 3 நாள்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, இரண்டாவது நாளாக இன்றும் (ஜூலை 25) ராமேசுவர மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், 10,000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையோரத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் இரு நாள்களாக வெறிச்சோடிக் காணப்படுகிறது.
Summary
Rameswaram fishermen on strike for the second day, demanding the release of fishermen arrested by Sri Lanka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை சிறைக் கலவரம்: பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: இந்தியா ஏ 377 ரன்கள் குவிப்பு!
அவிஷ்கா பெர்னாண்டோ சதம்: இலங்கை ஏ அணி 322 ரன்கள் குவிப்பு!

ஆடுகளத்தில் கடும் வாக்குவாதம்; வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரருக்கும் என்ன பிரச்னை?
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




