நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 கோடி அபராதம்?

தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை குறித்த சட்ட திருத்த மசோதா குறித்து...

News image

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 8:28 am IST

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான தண்டனை குறித்த சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு)சட்டம் 24-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 24) அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்வு முறைகேடுகளில் தனிநபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போதைய சட்ட திருத்த மசோதாவின்படி, தேர்வு முறைகேடுகளில் ஈடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி அபராதமும் விதிக்க வழிசெய்கிறது.

இந்த சட்ட திருத்த மசோதா, வரும் திங்கள்கிழமையில் (ஜூலை 27) நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கவுள்ளது.

Summary

Jail up to 10 years, Rs 10-cr fine for exam leak: Centre's Plan Against Paper Leaks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.