மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று முடிவெடுக்கவுள்ளது.
நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர். ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடக் கோரி மத்திய தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மாணவர்கள் கலையச் சொல்லி தடியடியும் நடத்தினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டாவும் ஜிதேந்திர சிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனையடுத்து, அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அவகாசம் கோரியதுடன், தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா குறித்து இன்று (ஜூலை 25) நண்பகலுக்குள் முடிவெடுப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் கூறினர்.
Summary
Will Education Minister Dharmendra Pradhan resign? Central Government to take a key decision today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்களின் தற்கொலைக்கு காரணமானவர் தண்டனை அனுபவிக்க வேண்டும்! - மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்!

தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?

மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவாரா?
போராட்டம் தீவிரம்: அமித் ஷாவுடன் சந்திப்பு! ராஜிநாமா செய்கிறாரா தர்மேந்திர பிரதான்?
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




