புதுச்சேரி: பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களைப் பின்பற்றினால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தெரித்துள்ளார்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா வெள்ளியன்று நடைபெறது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:
இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று பிரதமர் மோடி சீர்சிருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய மூன்று மந்திரங்களைபரிந்துரைக்கிறார். இந்த மூன்று மந்திரங்களை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்து இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படித்து முடித்து பணிபுரிய எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் நமது நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யுங்கள்.
மதம், மொழி,கலாச்சாரம் ஆகியவற்றால் நாம் வேறுபட்டாலும் அடிப்படையில் நாம் அனைவரும் இந்தியர். நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


