மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் போலி வாக்காளர்கள்: காங்கிரஸ் மனுவினை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வாக்காளர் பட்டிய்லில் பெருமளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி, காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் போலி வாக்காளர்கள்: காங்கிரஸ் மனுவினை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 

புது தில்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியலில் பெருமளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி, காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 28-ஆம் தேதியன்றும், ராஜஸ்தானில் டிசம்பர் 2-லும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் வாக்காளர் பட்டிய்லில் பெருமளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவர்கள் மனுவில் கூறப்பட்டிருந்தாவது  

வாக்காளர் பட்டியலில் அதிக அளவில்  போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை முறையாக சரிசெய்த பிறகு நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும். அத்துடன் குறைபாடுகள் இன்றி நியாயமாக தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும். 

பூர்த்தியான வாக்காளர் பட்டியலை பிடிஎப் படிவத்திற்குப் பதிலாக வழக்கமான பட்டியல் வடிவத்தில் வெளியிட வேண்டும். 

ஒவ்வொரு தொகுதியில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளில் 10 சதவீதம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குள்ள மின்னணு வாக்கு இயந்திரத்தில், வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும். 

மத்திய பிரதேசத்தில் 60 லட்சமம், அதேபோல ராஜஸ்தானில்  41 லட்சமும் போலி வாக்காளர் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக, ஆய்வுச்செய்தி ஒன்று தெரிவிக்கிறது.  எனவே, ராஜஸ்தானில், 71 லட்சம் புதிய வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. 

எனவே இத்தகைய குறைபாடுகளைக் களைந்த பின்னர் நேர்மையான முறையில் தேர்தல்  நடத்தபட வேண்டும். 

இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இம்மனுவின் மீதான இறுதி விசாரணை வெள்ளியன்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. அப்போது இம்மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள்  தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com