
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் திங்களன்று சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் வைத்திலிங்கம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் திங்களன்று வீட்டில் இருந்து சட்டப்பேரவைக்கு தனது அதிகாரப்பூர்வ வாகனத்தைப் பயன்படுத்தாமல் சைக்கிளிலேயே வந்திருக்கிறார். அவருடன் அவரது கட்சியினர் சிலரும் சைக்கிளில் வந்துள்ளார்கள்.
செய்தியாளர்கள் அவரிடம் சைக்கிளில் வந்ததற்கு காரணம் என்ன என்று வினவினார்கள். அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் இது ஒரு சிக்கன நடவடிக்கை என்று கூறியதுடன், சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.