உ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி காலமானார் 

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்
உ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி காலமானார் 
Updated on
1 min read

புது தில்லி: உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களில் முக்கியவமானவர் என்.டி. திவாரி . இவர் அந்த மாநிலத்தின் முதல்வராக மூன்று முறையும், உத்தரபிரதேசத்திலிருந்து பிரிந்த உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக ஒரு ஒரு முறையும் இருந்துள்ளார். 

அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர் ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு2007 முதல் 2009 வரை அப்பணியில் இருந்துள்ளார். 

உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தில்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழன் மதியம அவரது உயிர் பிரிந்தது.   

18.10.1925 அன்று பிறந்த அவர் தனது பிறந்த நாளன்றே உயிரிழந்த சம்பவம அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   

அத்துடன் இரண்டு மாநிலங்களுக்கு முதல்வராக இருந்த ஒரே  இந்தியர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com