இந்தியாவிலுள்ள கொல்கத்தா, ஹால்டியா ஆகிய துறைமுகங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு, இந்தியா அளித்துள்ள வாய்ப்பை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து விரிவான ஆலோசனைக்கு முடிவெடுக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு, ரூ.66,000 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 38 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கொல்கத்தா, ஹால்டியா ஆகிய துறைமுகங்களை, சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தி கொள்ளும்படி, அந்த நாட்டிடம் சில மாதங்களுக்கு முன் இந்தியா தெரிவித்தது. இரு தரப்பு வர்த்தகத்துக்கான செலவை குறைக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து வங்கதேசம் இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்த நாட்டிலுள்ள சிட்டகாங், மோங்லா ஆகிய துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்க வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, வங்கதேச கப்பல் போக்குவரத்துத் துறை செயலாளர் அப்துஸ் சமத், அந்நாட்டின் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவது குறித்து அரசின் பல்வேறு துறைகள், அரசு சாராத நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருடன் விரிவாக விவாதிக்கப்படும். அவர்களது கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். சிட்டகாங், மோங்லா துறைமுகங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் இந்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடகிழக்கு மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்துக்காக சிட்டகாங், மோங்லா ஆகிய துறைமுகங்களை பயன்படுத்திக் கொள்ள இந்தியாவை அனுமதிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்துக்கு, வங்கதேச அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது.
இந்த ஒப்பந்தத்தில், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளையும் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தாயாகும் ஜன நாயகன் பட நடிகை!

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

