வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம் ஆனால் உண்மை ஒருநாள் வெளிவரும்: ராகுல் காட்டம்

பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம், ஒளியலாம் ஆனால் உண்மை ஒருநாள் வெளிவரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காட்டமாகப் பேட்டியளித்துள்ளார்.

News image
Updated On :26 அக்டோபர் 2018, 10:17 am

DIN

சிபிஐ இயக்குநர்கள் அலோக் வர்மா நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் முன்னிலையில், தயாள் சிங் கல்லூரியில் இருந்து சிபிஐ தலைமையகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். இதில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் ஷரத் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்கள் முழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Story image

இந்நிலையில், சிபிஐ தலைமையகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து லோதி காவல்நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சிறை வைக்கப்பட்டார்.

பின்னர் விடுவிக்கப்பட்டத்தையடுத்து லோதி காவல்நிலையத்தின் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கரிஸ் தலைவர் ராகுல் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம், ஒளியலாம் ஆனால் உண்மை ஒருநாள் வெளிவரும். சிபிஐ இயக்குநரை நீக்குவதால் மட்டும் எல்லாம் முடிந்துவிடாது. பிரதமர் மோடி பயத்தின் காரணமாக வேண்டுமென்றே சிபிஐ இயக்குநருக்கு எதிராக செயல்படுகிறார் என்று காட்டமாகப் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.