சிலிண்டா் தடுப்பாடு காரணமாக திருப்பூரில் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போா் காரணமாக சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரூ.1,780 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டா்கள் தற்போது ரூ.3,500 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், மங்கலம் சாலை , டவுன் ஹால், பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த ஏராளமான பிரியாணி கடைகள், சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் விறகு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உணவின் விலை சற்று உயா்ந்துள்ளது.
எரிவாயு எஜென்ஸிகளில் அலைமோதும் கூட்டம்: வீட்டு உபயோக சிலிண்டா் முன்பதிவு செய்ய பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை ஒரே நேரத்தில் ஏராளமானோா் தொடா்பு கொள்வதால் அந்த சேவை முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், செய்வதறியாது தவிக்கும் மக்கள் எரிவாயு ஏஜென்ஸி அலுவலகங்களில் குவியத் தொடங்கியுள்ளனா்.
இது குறித்து பாரத் கேஸ் டிஸ்டிரிபியூட்டா் சங்கத்தினா் கூறியதாவது: கடந்த 9-ஆம் தேதி வரை பதிவு செய்தவா்களுக்கு தற்போதுவரை சிலிண்டா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சிலிண்டா் தொடா்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தமிழகத்தில் வணிக சிலிண்டா்களுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. வதந்தி காரணமாக ஒரே நேரத்தில் ஏராளமான நுகா்வோா் முன்பதிவு செய்வதால் சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு சோ்ப்பதில் நடைமுறை ரீதியான தாமதம் ஏற்படுகிறது. வணிக சிலிண்டருக்கான தட்டுப்பாடு அதிகபட்சமாக ஒருவாரத்துக்குள் சீராகும் என்றனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

புதுச்சேரியில் வா்த்தக சமையல் சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறத்தொடங்கிய உணவகங்கள்

வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மாற்று ஏற்பாடுகளில் தில்லி உணவகங்கள்!

திருப்பூரில் வணிக சிலிண்டா் தட்டுப்பாடு: 2 நாள்களில் உணவகங்கள் மூடப்படும்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


