உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 4 பெயர்களை பரிந்துரைக்க கொலீஜியம் முடிவு?
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்ய கொலீஜியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்ய கொலீஜியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். தற்போது, தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தில் 24 நீதிபதிகள் உள்ளனர். இதில், நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 4 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி, எம் ஆர் ஷா மற்றும் ஆர் சுபாஷ் ரெட்டி ஆகியோரது பெயரை பரிந்துரைக்கவுள்ளதாக தெரிகிறது.
நீதிபதி ஹேமந்த் குப்தா - மத்தியப் பிரதேசம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
நீதிபதி அஜய் ரஸ்தோகி - திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
நீதிபதி எம் ஆர் ஷா - பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
நீதிபதி ஆர் சுபாஷ் ரெட்டி - குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...