நாகாலாந்து மாநிலத்தில் நடப்பு பருவமழை காலத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட பேரழிவை சீரமைக்க ரூ.800 கோடி நிதியுதவி வழங்க மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு செயலாளர் ரொவிலாட்டோ மோர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: நாகாலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பேரிடரால் மொத்த மக்கள் தொகையில் 13.19 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 48,821 குடும்பங்களும், 532 கிராமங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 5408.57 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது.
இந்த பருவமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில், மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்ததுடன், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மாநிலத்தின் தலைநகராகிய கொஹிமா மற்றும் சென்சாங்க், கிப்பியர் மற்றும் பெக் மாவட்டங்கள் மழை சேதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்சாங்க், கிப்பியர் மற்றும் பெக் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஜூலை 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 15 நாட்களாக மாநிலத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பு இன்றி துண்டிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மொத்தம் 359 இடங்களில் சாலைகள் சேதமடைந்தும், பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
நாகாலாந்து மாநில பேரிடர் மேலாண்மை குழு (என்எஸ்டிஎம்ஏ) மற்றும் உணவு மற்றும் குடிமை பொருட்கள் வழங்கல் துறையும் இணைந்து விமானம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. மழை வெள்ளத்துக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 3 ஆயிரம் குடும்பத்தினர் கோடிக்கணக்கான மதிப்புள்ள வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
இதனிடையே மத்திய, மாநில அமைச்சர்கள் குழு செவ்வாய்கிழமை முதல் 4 நாட்கள் நேரில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து மதிப்பீடு தயாரிக்க வருகை தர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்
சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்!
ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

