பிரதமர் நரேந்திர மோடியும், தேர்தல் ஆணையமும் ஆதரிக்காததால், தெலங்கானா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டத்தை முதல்வர் சந்திரசேகர் ராவ் கைவிட வாய்ப்புள்ளது என்று அந்த மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுடன் சேர்த்து, தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தும் வகையில், சட்டப் பேரவையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை சந்திரசேகர் ராவ் அரசு அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய சந்திரசேகர் ராவ், இன்னமும் இதுகுறித்து முடிவெடுக்கவில்லை என்றார்.
இந்நிலையில், ஹைதராபாதில் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சரவண் தசோஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை மோடியும், தேர்தல் ஆணையமும் ஆதரிக்கவில்லை. இதன் காரணமாக, சந்திரசேகர் ராவ் தனது திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
சட்டப் பேரவையை கலைக்கவே சந்திரசேகர் ராவ் உண்மையில் விரும்பினார். தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களிடம் இதையே அவர் தெரிவித்து வந்தார்.
மோடியின் கைப்பாவையாகவும், அடிமையாகவும் சந்திரசேகர் ராவ் உள்ளார். சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமரிடம் உள்ளது. அவர்தான், சந்திரசேகர் ராவின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதை வைத்து பார்க்கையில், தெலங்கானா சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்பது தெரிகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
த்ரிஷ்யம் - 3 டீசர்!

தும்பாட் - 2 வெளியீட்டுத் தேதி!

வாட்ஸ்ஆப், முகநூல்... சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!
மு.க. ஸ்டாலின்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

