இந்தியாவுடன் நீண்டகால உறவைப் பேணுவதே, பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கிடையேயான முதலாவது பேச்சுவார்த்தை, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் என்.மேட்டீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் திட்டம்' சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு, இந்திய நாட்டின் ஒத்துழைப்பே மிக முக்கியக் காரணமாகும். இத்தைகைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே, இந்தச் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் நல்லுறவை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இந்தியாவின் ரஷிய ஏவுகணைகள் இறக்குமதி செய்யும் விவகாரமும், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிரமாற்றம், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவுடன் அடுத்த 50 ஆண்டுகாலத்துக்கு நீடித்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம். அந்த நோக்கத்துக்காக உதவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கும், ராணுவ ரீதியிலான நல்லுறவை மேம்படுத்தவும் இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்று பாம்பியோ தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், இந்திய மற்றும் அமெரிக்கா இடையிலான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இதில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் இந்த உறவு மிக சக்திவாய்ந்ததாக அமையும். அனு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நாடுகளின் குழுவில் இந்தியாவை இடம்பெறச் செய்வது தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பின் திட்டங்களை இந்தியா வரவேற்கிறது. பயங்கரவாதத்தை இருநாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும். பாகிஸ்தானில் பரவி வரும் பயங்கரவாதம் காரணமாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரின் எதிர்கால திட்டங்களின் அடிப்படையில் இக்கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த கூட்டம் அமைந்தது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. இது இருநாடுகளின் மக்களுக்கும் பெரும் பயனுடையதாக அமையும். அமைதி, வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பயன்படுத்துவது தொடர்பாகவும் இதில் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடியை சந்தித்த ஃபட்னவீஸ்: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!

அரளிப்பூ மனிதர்கள் (சிறுகதைகள்)

ஜவ்வாதுமலை தெய்வங்களின் புலம் பெயர்வு வாழ்வியல்
ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



