8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பாதுகாப்பு முகமைகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள்: உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

குற்றவாளிகளின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ‘சிசிடிஎன்எஸ்’ இணைய அமைப்பு முறையை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சமூக வலைதளங்களில் குற்றவாளிகளின் தகவல்களைத் தேடுவதற்கும், அவா்களின் முகத்தைக் கண்டறிவதற்கும் நாட்டிலுள்ள பாதுகாப்பு முகமைகளுக்கு புதிய மென்பொருள்களை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த 3 நாள்கள் கருத்தரங்கை ராஜ்நாத் சிங், வியாழக்கிழமை தொடக்கி வைத்து பேசியதாவது:

இணையவழிக் குற்றங்கள் பெருகிவிட்டன. நாட்டின் ரகசியத் தகவல்களை, ‘நிழல்’ இணையத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகள் விற்பனை செய்தும், வாங்கியும் வருகின்றனா். இது போன்ற குற்றங்களைத் தடுக்க உள்துறை அமைச்சகத்தில் இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ‘சிசிடிஎன்எஸ்’ இணைய அமைப்பு முறையை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு முறையில் இல்லாத புதிய குற்றவாளிகளைப் பற்றி அறிந்து கொள்ள, சமூக வலைதளங்களிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றையும் உள்துறை அமைச்சகம் கொள்முதல் செய்ய உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.