சாலை இல்லாத அவலம்: வழியிலேயே குழந்தை பெற்று வீடு திரும்பிய தாயும் சேயும்

சமீபகாலத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பான கருத்துக்கள் ஊடகங்களிலும், தனி மனிதர்களிடமும் அதிகமாக பேசப்பட்டது.
சாலை இல்லாத அவலம்: வழியிலேயே குழந்தை பெற்று வீடு திரும்பிய தாயும் சேயும்
Updated on
1 min read

சமீபகாலத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது தொடர்பான கருத்துக்கள் ஊடகங்களிலும், தனி மனிதர்களிடமும் அதிகமாக பேசப்பட்டது.

வளர்ந்த நாகரீக மக்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதையே பாதுகாப்பானது என்று கருதினாலும், சிலருக்கு அந்த வாய்ப்பே கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலையாக உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டம் அருகே உள்ள மலைப்பிரதேசத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது வீட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு சாலை வசதி இல்லாததால் கொம்பில் தொட்டில் கட்டி அவரை அவரது குடும்பத்தினர் தூக்கிச் சென்றனர்.
 

ஆனால் பிரசவ வலி அதிகமானதால், வழியிலேயே அவர் குடும்ப உறுப்பினர்களின் உதவியோடு குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதால், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீடு திரும்பியுள்ளனர்.

புகைப்படம், விடியோ : ஏஎன்ஐ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com