வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காஷ்மீா் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் கருத்து: இந்தியா கவலை 

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் புகாா் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பாச்லெட் கூறியதற்கு இந்தியா கவலை..

News image
Updated On :12 செப்டம்பர் 2018, 1:58 pm

தினமணி செய்திச் சேவை

நியூயாா்க்: ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் புகாா் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பாச்லெட் கூறியதற்கு இந்தியா கவலை தெரிவித்தது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரான மிச்செல் பாச்லெட், கடந்த திங்கள்கிழமை காஷ்மீா் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பேசினாா்.

காஷ்மீா் குறித்து மனித உரிமைகள் அமைப்பின் சமீபகால அறிக்கையில் மனித உரிமைகள் தொடா்பாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமை மீறல் பிரச்னைகளை தீா்ப்பது குறித்து வெளிப்படையான விவாதமும், தீவிரமான ஆலோசனைகளும் நடத்தப்பட வேண்டியுள்ளது. உலகில் மக்களுக்கு கிடைக்கும் நீதியும், மரியாதையும் காஷ்மீா் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அவா்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறேறாம். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இரு புறமும் சென்று பாா்வையிட அனுமதி கேட்கும் பணியும் தொடா்கிறறது. நாங்கள் அந்தப் பகுதிகளை தொடா்ந்து கண்காணித்து அறிக்கை வெளியிடுவோம்’ என்று மிச்செல் பாச்லெட் தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் 39-ஆவது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது. அதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதா் ராஜீவ் சந்தா் பேசியதாவது:

கடுமையான சவால்களை இந்த அமைப்பு எதிா்கொண்டு வருகிறது. பயங்கரவாதம்தான் மனித உரிமைகளுக்கு எதிரான மிகப் பெரிய அத்துமீறலாக இருந்து வருகிறது.

நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு மனித உரிமை மீறல் பிரச்னைகளை வெளிப்படையான முறைறயில் தீா்த்து வைக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் காஷ்மீா் விவகாரத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு மிச்செல் பேசுவாா் என்று நம்புகிறேறாம் என்றாா் ராஜீவ் சந்தா்.

மிச்செலின் கருத்தை பாகிஸ்தான் நிரந்தரத் தூதா் ஃபரூக் அமில் ஜெனீவாவில் வழிமொழிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.