கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐடிடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

பாஜக தொண்டர்களின் தேர்தல் தாரக மந்திரம் என் வாக்குச்சாவடி வலிமையானது'- பிரதமர்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, என் வாக்குச்சாவடி வலிமையானது' என்பதே பாஜக தொண்டர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி

Published On :


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, என் வாக்குச்சாவடி வலிமையானது' என்பதே பாஜக தொண்டர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கிராமப்புற ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்), நவாடா(பிகார்), காஜியாபாத்(உத்தரப் பிரதேசம்), ஹஜாரிபாக்(ஜார்கண்ட்), மேற்கு அருணாசல்(அருணாசலப் பிரதேசம்) ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் நமோ செயலி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
பாஜகவின் மிகப் பெரும் பலமே அதன் தொண்டர்கள் தான். அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாகவே, இத்தகைய குறுகிய கால இடைவெளியில் பாஜக மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. 
அந்தந்த வாக்குச்சாவடிகளில் கவனம் செலுத்தும் தொண்டர்களின் சாமர்த்தியத்தினாலே, இன்று பாஜக இத்தனை பலம் கொண்டு விளங்குகிறது. அத்தகைய தொண்டர்களின் துணையோடு, அடுத்த ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தொண்டர்கள் அவரவர் தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். என் வாக்குச்சாவடி வலிமையானது' என்பது ஒன்றே நம் தாரக மந்திரம். அதுவே நம் வலிமை.
பாஜகவின் பக்கம் தொடர்ந்து காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. அந்தக் காற்றில் அடித்துச் செல்லப் படாமல், ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ளவே, எதிர்க்கட்சிகள் கைகோத்து நின்று கொண்டிருக்கின்றன. அவை தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களையே செய்து வருகின்றன. ஆனால், மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். 
எதிர்க்கட்சிகள் அனைத்தும் தூக்கக் கலக்கத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று மோடி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.