
பங்குச் சந்தையில் களமிறங்கும் என்எஸ்இ: பிஎஸ்இ மற்றும் எம்எஸ்இஐ-யில் வர்த்தகம் தொடங்குகிறது!
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) நிறுவனத்தின் பங்குகள், பிஎஸ்இ-ஐ தவிர மெட்ரோபாலிட்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (MSEI) தளத்திலும் வர்த்தகம் மேற்கொள்ளப்படும்.

புதுதில்லி: நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) நிறுவனத்தின் பங்குகள், பிஎஸ்இ-ஐ தவிர மெட்ரோபாலிட்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (MSEI) தளத்திலும் வர்த்தகம் மேற்கொள்ளப்படும்.
நாளை (செப்டம்பர் 24) முதல் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) பங்குகள் பிஎஸ்இ-யில் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட உள்ளன. அதே நாளில், இந்த பங்குகள் மெட்ரோபாலிட்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (MSEI) சந்தையிலும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்ட பங்குகள் என்ற சிறப்புப் பிரிவின் கீழ் வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்படும் என்று எம்எஸ்இஐ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
ரூ. 22,569 கோடி மதிப்பிலான நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், ஐபிஓ, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாளில் 5.71 மடங்கு என்ற வலுவான சந்தாவைப் பெற்றது.
2024 ல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்ட ரூ. 27,870 கோடி மதிப்பிலான ஐபிஓ-க்கு அடுத்தபடியாக, நாட்டின் 2வது மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடாக இது அமைந்துள்ளது. 2022ல் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்ட ரூ. 21,000 கோடி மதிப்பிலான ஐபிஓ வெளியீட்டையும் இது முந்தியுள்ளது.
Summary
Shares of the (NSE) will also be available for trading on the Metropolitan Stock Exchange of India (MSEI) from Thursday, alongside BSE.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







