தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாவோயிஸ்ட் தலைவர் சரண்

3 மாநிலங்களில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் கமலேஷ் காஞ்சு வியாழக்கிழமை போலீஸில் சரணடைந்தார். 

Published On :


3 மாநிலங்களில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் கமலேஷ் காஞ்சு வியாழக்கிழமை போலீஸில் சரணடைந்தார். 
பிகார்-சத்தீஸ்கர்-ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களின் மாவோயிஸ்ட் குழு தலைவராக இருந்த கமலேஷ் காஞ்சு என்னும் பிர்சை ஜி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலமாவ் பிரிவு காவல் துறை அதிகாரிகள் மனோஜ் குமார் ஜா மற்றும் விபுல் சுக்லா முன்பு சரணடைந்தார்.
3 மாநிலங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதால் போலீஸார் அவரை தேடி வந்தனர். அதையடுத்து அவரை ஒப்படைப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு என போலீஸார் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அவர் சரணடைந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெல்காடா கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ், பல நக்ஸல் தீவிரவாத குழுவினருடன் தொடர்பில் இருந்தார். அவர் 12 வயதிலேயே நக்ஸல் குழுவினருடன் இணைந்து விட்டார். 3 மாநிலங்களிலும் நடந்த பல தீவிரவாத நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பு உண்டு என்றனர்.
நக்ஸலில் இணைந்தது குறித்து கமலேஷ் கூறுகையில், ஆதிவாசி சமூகத்தினரை மக்கள் இழிவாகப் பார்த்தனர். அது தான் என்னை நக்ஸல் குழுவினருடன் சேர வைத்தது. நான் தெரியாமல் தான் அவர்களுடன் இணைந்தேன். அவர்களுக்கு கடிதம் பரிமாறவும், பொருள்களை பரிமாறிக் கொள்ளவும் என்னைப் பயன்படுத்திக் கொண்டனர். எனது குடும்பத்தினரை பாதுகாக்கும் கடமை உள்ளதால் தற்போது போலீஸாரிடம் சரணடைந்தேன். எனது சமூகத்தினர் குறித்து வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தும் நோக்கில் சரணடைந்தேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.