வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

வெள்ள நிவாரணம்: மத்திய அரசிடம் ரூ.4,700 கோடி கேட்கிறது கேரளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு ரூ.4,700 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கேட்டிருக்கிறது.

Published On :


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு ரூ.4,700 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கேட்டிருக்கிறது.
கேரளத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் சிக்கி 488 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமன்றி, அதிக அளவில் பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களைப் பார்வையிட வந்த பிரதமர் மோடி(ரூ.500 கோடி), மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (ரூ.100 கோடி) ஆகியோர் மாநிலத்துக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தனர். அந்தத் தொகையை, கேரள அரசுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 21-ஆம் தேதி வழங்கி விட்டது.
இந்நிலையில், கேரளத்துக்கு ரூ.4,700 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
கேரளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருள் சேதம், வேளாண் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கேரள அரசு அனுப்பியுள்ளது. அதில், வெள்ள பாதிப்புகள் குறித்து துறை வாரியான விவரங்கள் குறித்தும், அவற்றை சீரமைப்பதற்குத் தேவையான நிதி விவரங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, மத்திய அரசின் விதிமுறைகளின்படி, வெள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு, பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு விரைவில் கேரளத்துக்கு அனுப்பி வைக்க உள்ளது.
அந்த குழுவின் அறிக்கையை, மத்திய உள்துறைச் செயலர் தலைமையிலான துணைக் குழு ஆய்வு செய்து, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான உயர் நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கும். பின்னர், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பது குறித்து அந்தக் குழு முடிவு செய்யும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.