ஜலந்தர்: நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தி வரும் கேரள பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை குற்றம் சாட்டப்பட்ட பேராயர் சார்ந்த கிறிஸ்துவ சபை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க பேராயரான பிராங்க்கோ முலாக்கல் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகார் அளிக்கப்பட்டு 75 நாள்களுக்கு மேலாகியும் பேராயர் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தொடர்ந்து கொச்சியில் பாதிக்கப்பட்ட பெண் சார்ந்த சபை கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தனக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட பேராயரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் இந்தியாவுக்கான வாடிகன் தூதர் கியாம்பெடிஸ்டா டிக்வட்ரோவுக்கு கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 8-ம் தேதி அனுப்பிய இக்கடிதத்தின் நகலை செய்தியாளர்களிடம் கடந்த செவ்வாய்கிழமை அந்த கன்னியாஸ்திரி வழங்கினார்.
அதில், அரசியல், பணபலத்தின் மூலம் தனக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பதாக பேராயர் மீது குற்றம்சாட்டியுள்ளார். இக்கடிதத்தின் நகல் இந்திய கத்தோலிக்க பேராயர்களின் கூட்டமைப்பின் (சிபிசிஐ) தலைவர் கார்டினல் ஆஸ்வால்டு கிரேஷியஸ் மற்றும் டெல்லி மெட்ரோபாலிட்டன் பேராயர் அனில் கெளட்டோ உள்பட 21 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பேராயர் பிராங்க்கோ முலாக்கல் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், எனக்கு எதிராக சதி நடக்கிறது. தேவாலயத்திற்கு எதிரானவர்கள் தான் என் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். முன்பு ஒருமுறை அந்த கன்னியாஸ்திரியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து அவரை கண்டித்தேன். அதன் காரணமாகவே என் மீது புகார் கூறி வருகிறார். எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் காவல்துறையினர் என்னை இதுவரை கைது செய்யவில்லை' என்றார்.
இதுதொடர்பான இரு வழக்குகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்த பொழுது, கேரள மாநில காவல்துறை சார்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதன் மீது திருப்தி தெரிவித்தது. அத்துடன், 'இது பழைய வழக்கு என்பதால், விசாரணை நடத்துவதற்கு காலதாமதாக வாய்ப்பு உள்ளது. எனவே கைது நடவடிக்கையை விட குற்றவாளிக்கு இறுதி தணடனை என்பதே முக்கியமானதாகும்' என்றும் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கினை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு கன்னியாஸ்திரி தரப்பில் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை குற்றம் சாட்டப்பட்ட பேராயர் சார்ந்த கிறிஸ்துவ சபை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
பேராயர் பிராங்க்கோ முலாக்கல் சார்ந்த ஜலந்தரில் இருக்கும் மிஷினரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் புகார் தொடர்பாக சுய விசாரணை நடத்தியதாகவும், அதில் கன்னியாஸ்திரி மேலும் 9 பேருடன் இணைந்து பேராயருக்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அத்துடன் புகார் அளித்த கன்னியாஸ்திரியின் நண்பர்களே, தேவாலய வருகை பதிவேட்டை கையாண்டவர்கள் என்பதால், பேராயரின் வருகை தொடர்பாக அதில் கூட முறைகேடு நடந்திருக்க கூடும் என்றும் அந்தச் சபை விசாரணை அறிக்கையில் கூறியுள்ளது.
கன்னியாஸ்திரி பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறப்பட்ட இடங்களில் சிசிடிவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ள அந்தச் சபை, கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறும் 2015-ம் ஆண்டு மே 23ஆம் தேதி பிஷப் பிராங்கோ வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் சேர்த்து 2015-ஆம் ஆண்டு தேவாலயத்தின் நடந்த தனிப்பட்ட நிகழ்வு ஒன்றில் பேராயர் பிராங்க்கோ முலாக்கலுடன், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி இருக்கும் புகைப்படத்தையும் சபை வெளியிட்டுள்ளது. அதனுடன் இந்த் புகைப்படத்தை ஊடகங்கள் வெளியிட்டு பரப்பினால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் கைகழுவியுள்ளது. இந்த நடடிக்கை பலராலும் அதிர்ச்சியுடன் விமர்சிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்!

நீதிக் கதைகள்! புதிய யோசனை!

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108

நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்! ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


