ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பீமா கோரேகான் வழக்கு: ஐவர் கைது நடவடிக்கையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் பீமா கோரேகான்  பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 9:24 am


புது தில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் பீமா கோரேகான்  பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக 5 பேர் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

அதில், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கைது செய்யப்பட்டவர்கள் வைத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், புனே காவல்துறை மேற்கொண்டு தங்களது விசாரணையை நடத்துமாறு கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில், இவர்கள் 5 பேரும் மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பதற்காகவே கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த விதமான விசாரணை அமைப்பு வேண்டும் என்பதை கோர முடியாது என்று கருத்துக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் ஒருமித்த தீர்ப்பையும், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மாற்றுக் கருத்தையும் பதிவு செய்தார்.

எனினும், அதிகபட்ச நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்பதால், தீபக் மிஸ்ரா அறிவித்த தீர்ப்பே அறிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டிருக்கும் மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, சுதா பரத்வாஜ், கௌதம் நாவ்லகா, வெர்னோன் கோன்சால்வ்ஸ், அருண் பெரெய்ரா ஆகிய 5 பேரின் வீட்டுக் காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.