உ.பி.: முகல்சராய் ரயில் நிலைய பெயர் மாற்றம்

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான முகல்சராய் ரயில் நிலையத்துக்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் தீனதயாள் உபாத்யாய-வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான முகல்சராய் ரயில் நிலையத்துக்கு மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் தீனதயாள் உபாத்யாய-வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையத்தில் நடைபெறும் பெயர் மாற்று விழாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இவ்விழாவின் போது, லக்னெள முதல் முகல்சராய் வரையிலான புதிய ரயில் சேவையையும், நாட்டிலேயே முதல்முறையாக பெண்கள் மட்டுமே இயக்கும் சரக்கு ரயிலையும், முகல்சராய் பணிமனையைப் "பொலிவுறு பணிமனை'யாக மாற்
றும் திட்டத்தையும் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.
ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் மாநில அரசின் முன்மொழிதலுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு கொள்கையளவில் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் அரசின் திட்டத்துக்கு அனுமதி வழங்கினார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரான தீனதயாள் உபாத்யாய, கடந்த 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே ரயில் நிலையத்துக்கு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரயில் நிலையத்தைப் பெயர்மாற்றம் செய்வதன் மூலம், பாஜக அரசு வரலாற்றை மாற்றி எழுத முயல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, "அரசின் அனைத்து திட்டங்களும் நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று உழைத்தவர் உபாத்யாய. எனவே அவரின் நினைவாகவே ரயில் நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது' என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com