மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது

News image
Updated On :8 ஆகஸ்ட் 2019, 7:29 am

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திங்கள்கிழமை ரத்து செய்தது. இதையடுத்து இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மனுத்தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு வழக்கறிஞர் எம்.எல்.சர்மா முறையீடு செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.