6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குஜராத்தில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி

குஜராத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2019, 4:06 am

DIN

குஜராத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 

குஜராத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக கேடா மாவட்டத்தில் பிரகதிநகரில் 3 மாடி கட்டடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அதில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.  

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே, இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.