புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வெள்ளம் சூழ்ந்த பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய சிறுவன் (திக்..திக் விடியோ) 

வெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி சிறுவன் ஒருவன் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2019, 10:18 am

DIN

தேவதுர்கா: வெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி சிறுவன் ஒருவன் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அங்குள்ள பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. 

குறிப்பாக யதுகிரி மற்றும் தேவதுர்கா ஆகிய இடங்களுக்கு நடுவே உள்ள பாலமானது கிருஷ்ணா ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தின் காரணமாக நீரால் நிரம்பி அது சாலையா அல்லது பாலமா என்று அடையாளம் காண இயலாத நிலையில் உள்ளது.

அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று அந்த பாலத்தைக் கடக்க வேண்டிய சூழல். பாலம் எது என்று ஓட்டுநர் அடையாளம் காண இயலாமல் தடுமாறிய சூழலில், சிறுவனொருவன் துளியும் பயமின்றி பாலத்தை கடக்க ஆம்புலன்சிற்கு உதவியுள்ளான்.

அப்போது எடுக்கப்பட்ட விடியோவானது இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.