சுதந்திர தினத்துக்கு பதிலாக குடியரசு தினம்: தில்லி காவல்துறைக்கு போதாத காலம்!

சுதந்திர தினத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியது குறித்து காவல்துறையினருக்கு தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், தவறுதலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்துக்கு பதிலாக குடியரசு தினம்: தில்லி காவல்துறைக்கு போதாத காலம்!
Updated on
1 min read


புது தில்லி: சுதந்திர தினத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியது குறித்து காவல்துறையினருக்கு தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், தவறுதலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு தில்லி காவல்துறைக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறை செய்திருக்கும் இந்த மனிதப் பிழையானது, உயர் அதிகாரிகளால் அறிக்கை சரிபார்க்கப்படாமலேயே வெளியிடப்படுவதையே உணர்த்துகிறது என்றும் இது குறித்து அறிவுறுத்தலை வெளியிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com