இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம்சாட்டியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து குறித்து, ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் திங்கள்கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்த போது, 'ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். நேரடியாக வந்து உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும்' என்றார்.