தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனைவி, 6 மகள்களை வீட்டை விட்டுத் துரத்திய தந்தை; காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 40 வயது பெண், தனது 6 மகள்களோடு காவல்நிலையத்துக்கு வந்து தன்னை கணவர் வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :3 டிசம்பர் 2019, 11:35 am

DIN


பாண்டா: உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 40 வயது பெண், தனது 6 மகள்களோடு காவல்நிலையத்துக்கு வந்து தன்னை கணவர் வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து பெண் பிள்ளைகளையே பெற்றுக் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த கணவர், மனைவி மற்றும் 6 மகள்களையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கணவர் மற்றும் அவரது மூத்த சகோதரர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகிறார்கள்.

முதல் பெண் 14 - 15 வயதிலும், கடைசி மகள் இரண்டரை வயதிலும் இருக்கும் நிலையில், தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, கணவர் லக்மணின் சகோதரர் வலியுறுத்துவதாகவும், இருவரும் சேர்ந்து தன்னை அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.