தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாடியில் இருந்து விழுந்த குழந்தை: மனிதச் சங்கிலி அமைத்துக் காப்பாற்றிய இளைஞர்கள் (விடியோ)

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக எந்தக் காயமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளது. டாமன் மற்றும் டையுவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் விடியோ வைரலாகியுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2019, 9:03 am

DIN

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக எந்தக் காயமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளது. டாமன் மற்றும் டையுவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் விடியோ வைரலாகியுள்ளது.

டாமன் மற்றும் டையுவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை, தவறி கீழே விழுந்தது. இதைக் கீழே இருந்த இளைஞர்கள் பார்த்ததும், உடனடியாக மனிதச் சங்கிலி அமைத்து குழந்தையைக் காப்பாற்றினர்.

கீழே விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தான். குழந்தை ஜன்னல் கம்பியை பிடித்துத் தொங்குவதைப் பார்த்த இளைஞர்கள், உடனடியாக அங்கே ஒருவர் கையை ஒருவர் பிடித்து மனிதச் சங்கிலியை அமைத்தனர். 

குழந்தை கீழே விழுந்த போது இளைஞர்கள் அக்குழந்தையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். இதனால், குழந்தை காயமின்றி காப்பாற்றப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.