ஜெய்ப்பூரில் ஹோட்டலுக்கு வந்த 19 வயது சிறுமி ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதுமே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஹோட்டல் விருந்திற்கு வந்த 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்ஷய் என்பவர் 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்' பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், மும்பையில் வசிக்கும் பெண் ஒருவர், நண்பர்களின் விருந்துக்காக அக்ஷய் இருந்த கிளப்பிற்கு வந்துள்ளார். அந்த விருந்தில் அக்ஷயும் கலந்துகொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில், விருந்து முடித்த பின்னர், அக்ஷய் அந்த சிறுமியை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில், பாதிக்கப்பட்ட பெண், கோ நாகோரியன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் அக்ஷய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அக்ஷய் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


