போலீஸார் மீது மலர் தூவி, தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய மக்கள்! மகிழ்ச்சிக் கூச்சலிட்ட பெண்கள்!
தெலங்கானா என்கவுன்டரை அடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸாருக்கு மலர் தூவியும், தங்கள் தோளின் மேல் தூக்கி வைத்துக்கொண்டாடினர்.


தெலங்கானா கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரை எரித்து கொன்ற விவகாரத்தில் லாரி தொழிலாளா்கள் முகமது ஆரிஃப், நவீன், சிவா மற்றும் சென்னகேசவலு ஆகிய 4 போ் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், குற்றம் நடந்த இடத்துக்கு அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது குற்றம்சாட்டப்பட்டவர்கள் 4 பேரும், தங்களிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சுட்டுவிட்டு தப்பிச்செல்ல முயன்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஹைதராபாத் போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் அனைவரும் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸாருக்கு மலர் தூவியும், தங்கள் தோளின் மேல் தூக்கி வைத்துக்கொண்டாடியும், அவ்வழியே பேருந்தில் சென்ற பெண்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டும், இனிப்புகள் வழங்கியும், ராக்கி கயிறு கட்டியும் அனைத்து தரப்பினரும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...