சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தோ்தல் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. 

News image
Updated On :7 டிசம்பர் 2019, 2:14 pm

DIN

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தோ்தல் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 20 தொகுதிகளுக்கான 2-ஆவது கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மாலை 5 மணி நிலவரப்படி 62.40 சதவீத வாக்குகள் பதிவாகின. 18 தொகுதிகளுக்கு மாலை 3 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஜம்ஷட்பூர் கிழக்கு மற்றும் ஜம்ஷட்பூர் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கும்லாவுக்கு உட்பட்ட சிசாய் தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.