தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜார்க்கண்ட் தேர்தல்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 11 மணி வரை 28% வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :7 டிசம்பர் 2019, 6:53 am

DIN


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், கும்லாவுக்கு உட்பட்ட சிசாய் தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

இதுபோன்ற ஒரு சில சம்பவங்களைத் தவிர்த்து, வாக்குப்பதிவு இதுவரை அமைதியாக நடைபெற்று வருகிறது.

20 தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், முற்பகல் 11 மணி நிலவரப்படி 28.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதல்வா் போட்டியிடும் இந்தத் தொகுதிக்கும், ஜாம்ஷெட்பூா் (மேற்கு) தொகுதிக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

எஞ்சியுள்ள 18 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 தொகுதிகள் பழங்குடியினா் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.