பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

கருணை மனுவை திரும்பப் பெற நிர்பயா குற்றவாளி முடிவு

திகார் சிறையில் உள்ள நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் கருணை மனு அனுப்பினார்.

News image
Updated On :8 டிசம்பர் 2019, 4:08 am

DIN

கடந்த 2012-இல் தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, திகார் சிறையில் உள்ள நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் கருணை மனு அனுப்பினார். அதை ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகிய நிராகரித்தது. மேலும் அதை குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைத்தது.

இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பயிருந்த தனது கருணை மனுவில் கையெழுத்திட மறுத்து, அதை திரும்பப் பெறுவதாக வினய் சர்மா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.