கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்.
கோப்புப்படம்.

முதல்வர் ஸ்டாலின்.
கோப்புப்படம்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை சந்திக்கிறார்.
அப்போது பிரசாரம், தேர்தல் வியூகம் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்தும் முதல்வர் தரப்பில் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை ஆளும்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து சந்திக்கிறது.
தோ்தல் நெருங்கிவிட்டதால் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரசாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன.
பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக 121 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவதால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...