தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜார்க்கண்டில் சி.ஆர்.பி.எஃப் படையினரிடையே மோதல்: இரண்டு அதிகாரிகள் பலி; இருவர் படுகாயம்

ஜார்க்கண்டில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப்படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு மூத்த அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், இரு வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

News image
Updated On :10 டிசம்பர் 2019, 7:14 am

DIN

ஜார்க்கண்டில் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப்படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு மூத்த அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், இரு வீரர்கள் காயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சி.ஆர்.பி.எஃப் படையினர் சிறப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 226வது பேட்டலியன் பிரிவைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில், உதவி கமாண்டன்ட் மற்றும் உதவி துணை ஆய்வாளர் இருவரும் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சி.ஆர்.பி.எஃப் படையினரிடையே மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் மற்றும் மாநில போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.