சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்கிறார் அமித் ஷா!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் நாளை (புதன்கிழமை) தாக்கல் செய்யவுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:28 pm

DIN


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து மத ரீதியிலான அடக்குமுறைகளைத் தொடர்ந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

60 ஆண்டுகள் பழமையான குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கோரும் இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை நீடித்தது. இதைத் தொடர்ந்து இரவு 12.05 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன்மூலம், இந்த மசோதாவானது மக்களவையில் நிறைவேறியது.

Story image

இந்நிலையில், இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு அறிமுகப்படுத்தி தாக்கல் செய்கிறார்.

இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என்ற மிகுந்த நம்பிக்கையில் பாஜக இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜகவின் கணக்கின்படி, மாநிலங்களவையின் மொத்த பலம் 238 ஆகும். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் பாஜகவின் 83 உட்பட மொத்தம் 105 ஆக உள்ளது. மேலும் அதிமுக (11 உறுப்பினர்கள்), பிஜு ஜனதா தளம் (7), ஒய்எஸ்ஆர்சிபி (2) மற்றும் தெலுங்கு தேசம் (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் பாஜக கோரி வருகிறது. இந்த 22 உறுப்பினர்களின் ஆதரவைச் சேர்த்தால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 127 ஆகிறது. இதன்மூலம், பெரும்பான்மைக்குத் தேவையான 120-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கிறது.

எனவே, மாநிலங்களவையிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறும் என்ற மிகுந்த நம்பிக்கையில் பாஜக உள்ளது.
 

Story image

பின்னணி:

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 
அந்தச் சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
 
ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த மசோதா மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.