சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

நிர்பயா குற்றவாளி திகார் சிறைக்கு மாற்றம்

012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான பவன் குமார் குப்தா திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

News image
Updated On :10 டிசம்பர் 2019, 10:56 am

DIN


புது தில்லி: 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான பவன் குமார் குப்தா திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவன் குமார் குப்தா, திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் என்று காவல்துறை அதிகாரி (சிறைத் துறை) சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.

திகார் சிறையின் இரண்டாம் எண் அறையில் குப்தா அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் முகேஷ் சிங் மற்றும் ஆக்சய்யும் அடைக்கப்பட்டுள்ளனர். 4ம் எண் அறையில் மற்றொரு குற்றவாளி வினய் ஷர்மா அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.