திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மர்ம நபர்கள் தாக்குதல்: அசாம் மூத்த பத்திரிகையாளர் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :10 டிசம்பர் 2019, 5:41 am

அசாம் மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

அசாம்  மாநிலத்தில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் நரேஷ் மித்ரா. இவர் கடந்த மாதம் அலுவலகத்திற்கு வெளியே மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் யாரோ இரும்புக்கம்பியால் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதுமட்டுமின்றி, தலையில் அடித்ததால் அவர் சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தார். சுமார் 17 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே கோமா நிலையில் இருந்தார். தலையில் உள் காயம் இருந்தது. மேலும், தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்றிரவு முதல் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இன்று காலை 6 மணியளவில் அவர் உயிரிழந்தார்' என்று தெரிவித்தனர். 

நரேஷ் மித்ராவின் மறைவுக்கு அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து அசாம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நரேஷ் மித்ரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.